சென்னை: முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் டெண்டர் முறை இருந்ததா? என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பியுள்ளார். டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். ஐகோர்ட் ஆணைப்படி டாஸ்மாக் நிறுவனத்தால் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் நீலகிரியில் மே 15 முதல் அமலில் உள்ளது. டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் 9 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுக்கூடங்களுக்கு ஆன்லைன் மூலம் டெண்டர் விடப்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் முடிவெடுக்கப்படுகிறது என அவர் கூறினார்.