தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுகவை வெளியில் இருந்து வந்து யாரும் அழிக்க தேவையில்லை; எடப்பாடியே போதும்: முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பேட்டி

 

Advertisement

சென்னை: அதிமுகவை வெளியில் இருந்து வந்து யாரும் அழிக்க தேவையில்லை; அதை எடப்பாடியே செய்து முடித்துவிடுவார் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பேட்டி அளித்துள்ளார். “ஜெயலலிதாவின் கனவை படுபள்ளம் தோண்டி புதைக்கக்கூடிய வேலையை எடப்பாடி பழனிசாமி செய்து கொண்டிருக்கிறார். 2026-ல் திமுகவின் ஆட்சிதான் உருவாகும். அன்று EPS தலைமையிலான அதிமுக எங்கே இருக்கும் எனக்கூட தெரியாது. ஆனாலும் அந்தக் கட்சி நல்லா இருக்கணும்னு செங்கோட்டையன் மாதிரி நானும் நினைக்கிறேன்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்று சேர வேண்டும், பிரிந்தவர்கள் இணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்" என்று 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனைத்தொடர்ந்து செங்ககோட்டையன் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகளை நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

தன் மறைவிற்குப் பிறகும் எஃகு கோட்டையாக அதிமுக இருக்கும் என்று நம்பிய ஜெயலலிதாவின் உறுதிமொழியை பொய்யாக்கும் விதமாக எஃகு கோட்டையை மக்கிய கோட்டையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தாலும் 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவதே கடினம். 'கடைசியாக செங்கோட்டையன் மேலேயே கை வெச்சுட்டியான்னு' கொங்கு மண்டல மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடம் புகட்டப்படும். சுயநல அரசியலை செய்துகொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று கருணாஸ் பேட்டி அளித்துள்ளார்.

 

Advertisement