Home/செய்திகள்/Aiadmk Dark Reign Edappadi Palaniswami D R P Raja Answer
அதிமுகவின் இருண்ட ஆட்சியில் இருந்து விடுபட்டு தமிழ்நாட்டு மக்கள் என்றும் நலமாகவே இருப்பார்கள்: எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பி.ராஜா பதில்
03:58 PM Mar 06, 2024 IST
Share
சென்னை: அதிமுகவின் இருண்ட ஆட்சியில் இருந்து விடுபட்டு விடியல் ஆட்சி கண்ட தமிழ்நாட்டு மக்கள் என்றும் நலமாகவே இருப்பார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலளித்துள்ளார். விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டுக் கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? .பதவியை காப்பாற்றுவதற்காக பாஜகவுடன் சேர்ந்து பச்சைத் துரோகம் செய்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.