தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக-பாஜ கூட்டணியை உடைக்க முயற்சி அண்ணாமலைக்கு அமித்ஷா ‘லாஸ்ட் வார்னிங்’: ‘பொய் சொல்லாதீங்க’ என கடுமையான குரலில் கண்டிப்பு

கோவை: அதிமுக, பாஜ கூட்டணியை உடைக்க முயற்சிப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து அமித்ஷா எச்சரித்து அனுப்பியுள்ளார். இது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மற்றும் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் அங்கம் வகித்து வந்தனர். ஆனால், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்கக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருந்ததால், ஓபிஎஸ் மற்றும் டிடிவியை பாஜ மேலிடம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தது. தமிழகம் வந்த பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கொடுக்காமல் அவமதித்ததால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி அடுத்தடுத்து பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறினர்.

Advertisement

கூட்டணியில் இருந்து இருவரும் வெளியேறிய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தேவைப்பட்டால் இருவரையும் சந்திப்பேன் என்றும் பாஜ முன்னாள் மாநில அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஆனால், கூட்டணி முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றால், முதல்வர் வேட்பாளரில் இருந்து எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று டிடிவி.தினகரன் தெரிவித்தார். இந்த சூழலில், கரூரில் கடந்த வாரம் நடந்த அமமுக மாவட்ட செயலாளர் இல்ல திருமணம் விழாவில் அண்ணாமலையும், டிடிவி.தினகரனும் சந்தித்து தனியாக பேசி கொண்டனர்.

அதே நேரத்தில், ‘அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது. அதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை’ என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதனால், டிச.15ம் தேதி தனது முடிவை அறிவிக்க உள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்தார். எடப்பாடிக்கு எதிராக அரசியல் செய்ய புதுகட்சியை தொடங்க ஓபிஎஸ் முடிவு செய்தார். தற்போது, செயல்பட்டு கொண்டிருக்கும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை கட்சியாக பதிவு செய்யவும் திட்டமிட்டார்.

இந்த சூழலில், பாஜ தலைமை தமிழகத்தில் ஒரு பலமான கூட்டணி அமைக்க திட்டமிட்டது. ஆனால், கூட்டணியில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியேறியதால் அமித்ஷா அதிர்ச்சியடைந்தார். விரைவில் தமிழகத்திற்கு வர உள்ள அமித்ஷா கூட்டணியை இறுதி செய்ய உள்ளார். இந்நிலையில், பாஜ மேலிடம் அழைப்பை ஏற்று, கடந்த 2 நாட்களுக்கு முன் ஓபிஎஸ் திடீரென டெல்லி சென்று அமித்ஷா மற்றும் பாஜ தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது, அதிமுகவில் எடப்பாடியை ஓரங்கட்டிவிட்டு, புதிய தலைமையை உருவாக்கி அதன் கீழ் பிரிந்தவர்கள் சேர்க்கலாமா? அல்லது புதிய கட்சி தொடங்குவதா? என்று அமித்ஷா-ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதனால், எடப்பாடி கடும் அதிர்ச்சியில் உள்ளார்.

இந்நிலையில், பாஜ மேலிடத்துடனும், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் கடும் மோதலில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை நேற்று அவசர அவசரமாக டெல்லி சென்று உள்ளார். பாஜ மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின் மாநில பாஜவுக்கு எதிராகவும், கூட்டணியை உடைக்கும் நோக்கத்தில் அண்ணாமலை செயல்பட்டு வருவதாக மேலிடத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. கடைசியாக மாநில தலைவரான நயினார் நாகேந்திரனே புகார் தெரிவித்தார். இதனால், மேலிடம் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருந்தது. கடந்த சில மாதங்களாக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் அண்ணாமலை புறக்கணித்தார்.

சமீபத்தில், அண்ணாமலை பல ஆயிரம் மதிப்பில் பெங்களூருவில் ரியல் எஸ்டேட் தொழில் தொடங்கி உள்ளதாக ஆதாரங்களுடன் தகவல் வெளியானது. இந்த நிறுவனத்திற்கு அண்ணாமலை, அவரது மனைவியின் தம்பி மற்றும் நெருங்கிய நண்பர் ஒருவர் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். தன்னுடைய வீட்டு வாடகை, கார் டீசல் செலவை நண்பர்கள் மற்றும் கட்சியினர் பார்த்து கொள்வதாக கூறிய மிஸ்டர் கிளீன் அண்ணாமலைக்கு எப்படி இவ்வளவு கோடி வந்தது என்று பாஜவினரே அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அண்ணாமலையின் சொத்து குவிப்பு ஆதாரங்களுடம் ரகசிய ரிப்போர்ட்டை அனுப்பினார். இந்த ஆதாரங்களை வைத்து அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுக்க பாஜ தலைமை முடிவு செய்தது. இதனால், அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டு, தனது ஆதரவாளர்கள் மூலம் ரசிகர் மன்றங்களை திறந்தார். இந்த மாத இறுதி அல்லது ஜனவரியில் அண்ணாமலை தனிக்கட்சி உறுதியாக தொடங்கி விடுவார் என்று நம்ப தகுந்த தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக பாஜ மாநில தலைவர் நயினாரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘அண்ணாமலை கட்சி தொடங்க மாட்டார்’ என கூறியிருந்தார்.

இந்த சூழலில், திருப்பூர் மாவட்டம் இடுவாய் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னக்காளிபாளையம் பகுதியில் திருப்பூர் மாநகராட்சி குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, அண்ணாமலை தலைமையில் நேற்று போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், இந்த போராட்டத்தை ரத்து செய்துவிட்டு, நேற்று மதியம் திடீர் அவசர பயணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது வீட்டில் நேற்று மாலை அண்ணாமலை சந்தித்து பேசினார். அப்போது, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜ அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, ‘அதிமுக கூட்டணியை ஏற்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று நீங்கள் பேட்டி கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டோம். அதன்படி செய்தீர்கள். பின்னர் மீண்டும், அதிமுக கூட்டணிக்கு எதிராக உங்கள் ஆதரவாளர்கள் ஏற்படுத்தியுள்ள வார் ரூம் மூலம் பிரசாரம் செய்வதை ஏற்க முடியாது. தொடர்ந்து இதுபோன்ற செயல்களை செய்தால், கட்சி உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும். இது கடைசி எச்சரிக்கை’ என்று அமித்ஷா கடுமையான குரலில் எச்சரித்தார். இதனால் சப்த நாடியும் அடங்கிப்போன அண்ணாமலை, விளக்கம் கொடுக்க முற்பட்டுள்ளார். ஆதாரத்துடன் கூறுகிறேன். ஏமாற்ற வேண்டும், பொய் சொல்ல வேண்டாம். எங்களுக்கு எல்லாம் தெரியும் என்றார் அமித்ஷா. இதனால் அண்ணாமலை அமைதியாகிவிட்டார். கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு வெளியில் வந்த அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றார்.

* பாஜ மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின் மாநில பாஜவுக்கு எதிராகவும், கூட்டணியை உடைக்கும் நோக்கத்தில் அண்ணாமலை செயல்பட்டு வருவதாக மேலிடத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

* கடைசியாக மாநில தலைவரான நயினார் நாகேந்திரனே புகார் தெரிவித்தார். இதனால், மேலிடம் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருந்தது. கடந்த சில மாதங்களாக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் அண்ணாமலை புறக்கணித்தார்.

Advertisement

Related News