சென்னை: ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் பரத்குமார் என்பவரிடம் ரூ. 2.11 கோடி ஏமாற்றியதாக புகாரில், அதிமுகவை சேர்ந்தவரும், நடிகருமான அஜய் வாண்டையார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுபோதையில், வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக இவர் மீது பட்டினம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஏற்கனவே வழக்குகள் உள்ளன.