அகமதாபாத்: அகமதாபாத்தில் விமானம் விழுந்து நொறுங்கிய மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த சென்னை மருத்துவர் உயிர் தப்பியது தெரிய வந்துள்ளது. சென்னையை சேர்ந்த மருத்துவர் அருண் பிரசாத், அகமதாபாத் பி.ஜே. மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்பு படித்து வருகிறார். விமான விபத்து நடந்தபோது மருத்துவ விடுதியின் 5வது மாடியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த அருண் பிரசாத் நூலிழையில் உயிர் தப்பினார். உணவருந்தியபோது பயங்கர வெடிச் சத்தம் கேட்டதால் 5வது மாடியில் இருந்து முதல் மாடி வரை ஓடி வந்ததாக மருத்துவர் பேட்டியளித்தார்.