அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 4 தீவிரவாதிகள் கைது..!!
Advertisement
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சசேர்ந்த 4 தீவிரவாதிகளும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத் விமான நிலையத்திற்கு அவர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான துல்லியமான நோக்கம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இதனால் அந்த விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தகுதிச் சுற்று மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்களுக்காக மூன்று ஐபிஎல் அணிகளும் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருவதற்கு சிறிது நேரம் முன்னதாக இந்த கைது செய்யப்பட்டுள்ளது.
Advertisement