ஆப்பிரிக்க நாடுகளில் பரவும் மார்பர்க் வைரஸ்: ருவாண்டாவில் இதுவரை 15 பேர் உயிரிழப்பு
Advertisement
மார்பர்க் வைரஸ் தோற்று ஏற்பட்டால் கண்கள், மூக்கு, வாயில் இருந்து ரத்தம் வடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர காய்ச்சல், தலைவலி, எலும்புகளில் வலி உள்ளிட்டவை இதன் ஆரம்ப கட்ட அறிகுறி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தம், உமிழ்நீர் மூலமும், வைரஸ் ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருந்தும் இது பரவும் என்பதால் இந்த வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவது கடினம் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு 50 சதவீதம் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், இது மிகவும் கொடிய வைரஸ்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
Advertisement