தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆப்கான் நிலநடுக்கத்தில் 800 பேர் பரிதாப பலி.. 2500 பேர் படுகாயம் : டெல்லி உள்பட வட மாநிலங்களில் நில அதிர்வு!!

புதுடெல்லி : பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையை மையமாகக் கொண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800 பேர் பலியான நிலையில் 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில், நேற்று நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைத்தொடரில் உள்ள அசதாபாத் பகுதியை மையமாகக் கொண்டு, சுமார் 29 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ளது.

Advertisement

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர் மற்றும் இந்தியாவின் டெல்லி, பஞ்சாப், அரியானா, ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள் மற்றும் தஜிகிஸ்தானின் சில பகுதிகளிலும் கடுமையான நில அதிர்வுகள் உணரப்பட்டன.சுமார் 5 முதல் 7 விநாடிகள் வரை பூமி அதிர்ந்ததால், பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை.

இருப்பினும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் 800 பேர் பலியானதாகவும், 2500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளில் மின்விசிறிகள் மற்றும் நாற்காலிகள் போன்றவை பயங்கரமாக ஆடிய காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், தொடர்ச்சியான பின் அதிர்வுகளுக்கு வாய்ப்புள்ளதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Related News