போட்டி 1ல் ஆப்கன்-ஹாங்காங் மோதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் அபுதாபியில் இன்று துவக்கம்: நாளை எமிரேட்சுடன் இந்தியா மோதல்
அபுதாபி: ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் அபுதாபியில் இன்று துவங்குகிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர், இந்தாண்டு, டி20 வடிவத்தில் நடைபெற உள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் உலகக் கோப்பை டி20 போட்டிகளுக்கு தயாராகும் வகையில், ஆசிய கோப்பை போட்டிகள், டி20 வடிவில் நடத்தப்படுகின்றன.
இப்போட்டிகளில், இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய 4 அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் ஆகிய 4 அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் துவக்க விழா அபுதாபியில் இன்று நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, நடைபெறும் முதல் போட்டியில், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் மோதுகின்றன.
இந்திய நேரப்படி, இரவு 8 மணிக்கு போட்டி நடக்கும். இந்திய அணி, நாளை நடக்கும் தனது முதல் போட்டியில், ஐக்கிய அரபு எமிரேட்சுடன் களமாட உள்ளது. பின், 14ம் தேதி, பாகிஸ்தானுடனும், 19ம் தேதி ஓமனுடனும் இந்தியா மோதவுள்ளது. சூப்பர் 4 போட்டிகள், செப். 20, 21, 23, 24, 25, 26 தேதிகளில் நடைபெறும். இறுதிப் போட்டி, வரும் 28ம் தேதி, துபாயில் நடைபெறும்.