பாப்கார்னுக்கு 3 விதமாக ஜிஎஸ்டி வரி விதிப்பதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கண்டனம்
என்றாலும், காராமெல் பாப்கார்ன் போன்ற சர்க்கரை சேர்க்கப்பட்ட, அதாவது பாப்கார்னின் இயல்பான சுவையை சர்க்கரை சேர்ந்து மாற்றி சுவைக் கூட்டியிருந்தால் அவை ஹெச்எஸ் 1704 90 90 -ன் கீழ் வரும். அந்த வகை பாப்கார்ன்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.பாப்கார்னுக்கு 3 விதமான ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதற்கு ஏற்கனவே சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பாப்கார்னுக்கு 3 விதமாக ஜிஎஸ்டி வரி விதிப்பது கண்டனத்துக்குரியது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "ஏழை எளிய மக்கள் பாப்கார்னை விரும்புகின்றனர். குழந்தைகள் வாங்கி சாப்பிடுகின்றனர். ஜிஎஸ்டி மூலம் அபரிவிதமான வருவாய் வருவதாக சொல்கிறார்கள். ஆனாலும் பாப்கார்னுக்கு வரி விதிப்பதை கண்டிக்கிறோம், "இவ்வாறு தெரிவித்துள்ளார்.