தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுகவுக்கு முஸ்லீம்கள் ஓட்டு போடவில்லை என்பது 100% உண்மை : அதிமுக நிர்வாகி சர்ச்சை பேச்சு

Advertisement

கோவை : அதிமுக சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளராகவும், கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் பொதுச்செயலாளராகவும் இருந்தவர் கோவையை சேர்ந்த அப்துல் ஜப்பார். இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில், இஸ்லாமிய மக்களுக்கு நிறைய காரியங்கள் செய்தும், அவர்கள் அதிமுகவுக்கு ஓட்டுப் போடாமல், திமுகவுக்கு வாக்களித்ததாக பேசினார். இவரது பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில், அவர் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், அதிமுக நிர்வாகி அப்துல் ஜப்பார், எஸ்டிபிஐ கட்சி நிர்வாகியுடன் பேசும் ஆடியோ வெளியாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதில், "அதிமுகவுக்கு முஸ்லீம்கள் ஓட்டு போடவில்லை என்பது 100% உண்மை. பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தபோதும் இஸ்லாமியர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை. பாஜக கூட்டணி இல்லாமல் அதிமுக போட்டியிட்ட போதும் இஸ்லாமியர்கள் வாக்களிக்கவில்லை. 2021 தேர்தலில் எஸ்.பி.வேலுமணி போட்டியிட்டபோது கரும்புக்கடை பூத்தில் 1,600 வாக்குகளே பதிவாகின. அதே நேரத்தில் திமுகவுக்கு 10,000க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவானது. 2024 தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை, அப்போதும் 1,200 ஓட்டுதான் பதிவாகி இருந்தது. பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியில் வந்து, நடந்த 2024 தேர்தல் முடிவு அதிமுகவிற்கு மிக மோசமாக இருந்தது. கூட்டணியின்றி யாரும் வென்றது இல்லை; எனவே பாஜகவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்தினேன். கோவையில் கட்சிக்கார இஸ்லாமியர்களே அதிமுகவுக்கு வாக்களித்தனர், வேறுயாரும் வாக்களிக்கவில்லை."இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement