அதிமுக பலவீனமடையவில்லை : எடப்பாடி பழனிசாமி பேட்டி
10:33 AM Aug 08, 2025 IST
சென்னை : அதிமுக பலவீனமடையவில்லை என்று எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும் கூட்டணிக்கு வருமாறு அதிமுக விடுத்த அழைப்பை கட்சிகள் நிராகரித்தது குறித்து பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், எந்த கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு அதிமுக கூட்டணிக்கு தான் அழைக்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.