ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தொகை: அமைச்சர் வழங்கினார்
Advertisement
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா தலைமை வகித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர் 11 பேரை தேர்வு செய்து, அவர்களின் படைப்புகளை நூல்களாக வெளியீடு செய்வதற்கு முதல் தவணை நிதி உதவியாக தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் நல ஆணையர் ஆனந்த், பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை, இணை இயக்குநர் (பொது) வாசுகி மற்றும் எழுத்தாளர்கள் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Advertisement