தொழிலதிபர் அதானிக்கு சம்மன் அனுப்பாமல் இந்திய அதிகாரிகள் தாமதிப்பதாக நியூயார்க் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!!
வாஷிங்டன் : தொழிலதிபர் அதானிக்கு சம்மன் அனுப்பாமல் இந்திய அதிகாரிகள் தாமதிப்பதாக நியூயார்க் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அமெரிக்காவில் சூரிய மின்சக்தி ஒப்பந்தம் பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபர் அதானி லஞ்சம் கொடுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமெரிக்க பங்குச் சந்தை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் அறிக்கை ஒன்றை நியூயார்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையில், தொழிலதிபர் அதானிக்கு, சம்மன் அனுப்பாமல் இந்திய அதிகாரிகள் தாமதம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இந்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதானிக்கு முறையாக சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனையேற்று நியூயார்க் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.