"அதானியே வெளியே செல்..." கென்யாவில் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் : விமான சேவை முடங்கியது!!
Advertisement
இதனை கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்துவதாக பலமுறை அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் நடைபெறாமல் கென்யா அரசு பார்த்து கொண்டது. ஆனால் இன்று ஜோமோ சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதானியே வெளியே செல் என்று முழக்கமிட்டு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விமான நிலைய ஊழியர்களின் போராட்டம் காரணமாக நைரோபி விமான நிலையமே ஸ்தம்பித்தது. ஏராளமான விமானங்கள் தாமதமான நிலையில், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
Advertisement