தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 85% கூடுதல்: வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 85% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1 முதல் இன்று வரை பருவமழை இயல்பாக 115.1 மி.மீ. மழை பெய்யும் நிலையில் 212.9 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 74% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement