அதானி வாங்கிய 10 நிறுவனங்களின் ரூ.62 ஆயிரம் கோடி கடனுக்கு ரூ.16,000 கோடி மட்டும் வசூல்: மீதமுள்ள பாக்கி தள்ளுபடி
இந்நிறுவனம் ரூ.7,795 கோடி கடன் வாங்கியிருந்த நிலையில், அதானி புராபர்ட்டீஸ் நிறுவனம் வெறும் ரூ.285 கோடி செலுத்தி வாங்கி உள்ளது. மீதமுள்ள 96 சதவீத கடனை தள்ளுபடி செய்துள்ளது. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் அழகான வார்த்தை ‘ஹேர்கட்’.இவ்வாறு 10 நிறுவனங்கள் ரூ.62,000 கோடி செலுத்த வேண்டிய நிலையில் அதானி குழுமம் ரூ.16,000 கோடியை மட்டும் செலுத்தி உள்ளது. பாக்கி 74 சதவீத கடனை பொதுத்துறை வங்கிகள் ஹேர்கட் செய்துள்ளன. பல்வேறு நிதி மோசடிகளால் குற்றம்சாட்டப்படும் அதானி லாபத்தை பெருக்க, அரசு அமைப்புகளே சலுகைகளை அள்ளித் தருகின்றன.இவ்வாறு கூறி உள்ளார்.