அதானி, அம்பானியிடம் டெம்போவில் கருப்பு பணம் விவகாரம்.. சிபிஐயின் அமைச்சராக உள்ள பிரதமர் மோடி ஏன் மவுனம் காக்கிறார் : ப.சிதம்பரம் விமர்சனம்
Advertisement
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,"பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது. இரண்டு முக்கிய தொழிலதிபர்களிடம் டெம்போ நிரப்பும் அளவு பணம் இருப்பதாகவும், அவை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படுவதாகவும் பிரதமர் மோடி மிகத் தீவிரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். முடிந்தால் ED, CBI-ஐ ஏவி விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுங்கள் என ராகுல் காந்தி கூறியிருந்தார்.ஆனால், CBI-ன் அமைச்சராக உள்ள பிரதமர் மோடி கடந்த 24 மணி நேரமாக மவுனம் காக்கிறார். ED-ன் அமைச்சராக உள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பதிலளிக்கவில்லை. இவர்களின் அமைதி ஆபத்தானது,"இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Advertisement