தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஷூட்டிங்குக்கு சென்ற போது ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த நடிகை: தலையில் பலத்த காயத்துடன் அட்மிட்

 

Advertisement

மும்பை: மும்பையில் படப்பிடிப்புக்குச் சென்றபோது, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த பிரபல நடிகை கரிஷ்மா சர்மா, தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா நேற்று முன்தினம் மும்பையில் உள்ள சர்ச்சுகேட் பகுதிக்கு படப்பிடிப்புக்காக புடவை அணிந்து புறநகர் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் ரயிலில் ஏறிய பிறகு, ரயில் வேகமாக நகரத் தொடங்கியுள்ளது. அப்போது, உடன் வந்த தனது தோழிகளால் ரயிலில் ஏற முடியவில்லை என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால், பதற்றத்தில் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது முதுகு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டு, ஒரு நாள் முழுவதும் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘எனது தலை வீங்கியுள்ளது. முதுகு மற்றும் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறேன்’ எனக் கூறியுள்ளார். அவரது தோழி ஒருவரும், மருத்துவமனையில் இருந்து கரிஷ்மா சர்மாவின் புகைப்படத்தைப் பகிர்ந்து, ரசிகர்கள் பிரார்த்தனை செய்யுமாறு கோரியுள்ளார். இந்தச் சம்பவம் ரயில் பயணத்தின் பாதுகாப்பைக் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Advertisement