நடிகை ஊர்வசி ரவுடேலா ஈடி முன் ஆஜர்
புதுடெல்லி: ஒன்எக்ஸ்பெட் என்ற நிறுவனம் உலகளவில் பந்தயத்துறையில் 18 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ஒன்எக்ஸ்பெட் என்ற சட்டவிரோத பந்தய செயலியுடன் தொடர்புடைய பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Advertisement
ஒன்எக்ஸ்பெட் தொடர்பான வழக்கில் ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ராபின் உத்தப்பா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அமலாக்கத்துறை முன் ஆஜராகி விளக்கம் அளித்தர். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்க அதிகாரிகள் பல மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
Advertisement