கணவர் பெயரை நீக்கினார்: பாடகர் கிரிஷை பிரிகிறார் நடிகை சங்கீதா?
சென்னை: நடிகை சங்கீதா, பாடகர் கிரிஷ் தம்பதி பிரிய உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சங்கீதா, மலையாள படங்களில் பிசியாக இருந்த சமயம், ஒரு விருது விழாவில், பிரபல பின்னணி பாடகர் கிரிஷை சந்தித்தார். சில மாதங்கள் டேட்டிங் செய்த இவர்கள் பின்பு 2009ம் ஆண்டு திருவண்ணாமலை கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இப்போது அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறார். தமிழ் திரையுலகில் இருக்கும் இணைபிரியா காதல் ஜோடிகளாக இவர்கள் இருப்பதாக ரசிகர்கள் அவ்வப்போது கூறுவதுண்டு. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்னை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
தனது பெயரை, “Sangeetha Krish” என்று வைத்திருந்த சங்கீதா, இப்போது “Sangeetha.act” என்று இன்ஸ்டாகிராமில் மாற்றியிருக்கிறார். அது மட்டுமன்றி இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில்தான் கடைசியாக அவர் தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதன் பிறகு, அவருடனான புகைப்படங்கள் எதுவுமே இல்லை. சங்கீதாவும் கிரிஷும் இன்னும் இருவரையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோ செய்துதான் வருகின்றனர். அது மட்டுமன்றி, இருவரும் ஒன்றாக இருக்கும் தங்களின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்னும் நீக்கவில்லை. இது குறித்து சங்கீதா கூறும்போது, ‘எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் சேர்ந்துதான் இருக்கிறோம்’ என்றார்.