தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடிகையிடம் ரூ.77 லட்சம் மோசடி; மாஜி உதவியாளர் கைது: மும்பை போலீஸ் அதிரடி

Advertisement

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் முன்னாள் தனிப்பட்ட உதவியாளரான வேதிகா பிரகாஷ் ஷெட்டி (32), நடிகைக்கு சொந்தமான சினிமா தயாரிப்பு நிறுவனம் மற்றும் அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் ரூ.77 லட்சம் மோசடி செய்துள்ளார். கடந்த 2021 முதல் 2024ம் ஆண்டு வரை ஆலியா பட்டின் உதவியாளராகப் பணிபுரிந்த வேதிகா, நடிகையின் நிதி ஆவணங்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் பயணத் திட்டங்கள் போன்ற முக்கிய பொறுப்புகளைக் கவனித்து வந்துள்ளார். இந்த காலகட்டத்தில், அதாவது மே 2022 முதல் ஆகஸ்ட் 2024 வரை, அவர் போலியான பில்களைத் தயாரித்துள்ளார். நடிகையின் பயணம், கூட்டங்கள் மற்றும் இதர ஏற்பாடுகளுக்காக ஆகும் செலவுகள் எனக் கூறி, அந்தப் போலி பில்களில் ஆலியா பட்டிடம் கையொப்பம் பெற்றுள்ளார்.

பின்னர், அந்தப் பணத்தைத் தனது நண்பரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றி, அங்கிருந்து மீண்டும் தனது சொந்தக் கணக்கில் வரவு வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிதி மோசடி குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், ஆலியா பட்டின் தாயாரும், நடிகையுமான சோனி ரஸ்தான், கடந்த ஜனவரி 23 அன்று மும்பை ஜுஹு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நம்பிக்கை மோசடி மற்றும் ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த வேதிகா ஷெட்டியை பெங்களூருவில் கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Related News