தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மயக்க மருந்து கலந்த பானத்தை கொடுத்து நடிகையை பலாத்காரம் செய்த மத குருவின் வீடுகள் இடிப்பு: குஜராத்தில் புல்டோசர் நடவடிக்கை

பரூச்: குஜராத்தில் நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மவுல்விக்குச் சொந்தமான சட்டவிரோத கட்டிடங்களை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளினர். குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் கர்மலி கிராமத்தில் மதரசா நடத்தி வரும் மத குரு அஜ்வத் பெமட் (53) என்பவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்றுள்ளார். இவரிடம், சூரத் நகரைச் சேர்ந்த 28 வயதான நடிகை ஒருவர் தனது குடும்பப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு பரிகாரம் செய்வதாகக் கூறி அந்தப் பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த பானத்தைக் கொடுத்து, அவர் மயங்கிய நிலையில் இருந்தபோது அஜ்வத் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கட்டாய மதமாற்றத்திற்கும் முயன்றதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கின் விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட அஜ்வத் பெமட் முறையான அரசு அனுமதியின்றி ரவித்ரா கிராமத்தில் வீடுகள் மற்றும் கடைகளையும், கர்மலி கிராமத்தில் உள்ள தனது மத்ரசாவிற்குள் ஒரு பெரிய கட்டிடத்தையும் கட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஏற்கனவே ஊராட்சி நிர்வாகம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், அவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சட்டவிரோத கட்டிடங்கள் என உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நிர்வாக நடுவர் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் நேற்று அந்த கட்டிடங்கள் அனைத்தும் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. ‘குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும்’ என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement