நடிகர் விஜயின் தராதரம் அவரது பேச்சிலேயே தெரிகிறது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
திருச்சி: திருச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அளித்த பேட்டி: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று மதுரை மாநாட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசியது தரம் தாழ்ந்து உள்ளது. சமீபத்தில் அரசியலில் நுழைந்து விட்டு ஒரு மாநிலத்தின் முதல்வரை, மிகப்பெரிய கட்சியின் தலைவரை, 40 ஆண்டுகள் அரசியலில் உள்ளவரை இவ்வாறு விமர்சனம் செய்வது தவறு.
Advertisement
இதில் இருந்தே விஜயின் தராதரம் அவ்வளவு தான் என்பதை காட்டுகிறது. கூட்டத்தில் 50 பேர் கூடி விட்டனர் என்பதற்காக இவ்வாறு பேசுவது சரியானதல்ல. எதிர்வரும் தேர்தலில் மக்கள் அவருக்கு பதில் கூறுவார்கள். திமுகவும் அவருக்கு பதிலடி கொடுக்கும். தேர்தலில் நல்ல பதில் சொல்வோம். விஜய் பேசியது சரியானதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement