அவதூறு கருத்துக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு கோரி நடிகர் சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு: சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்
Advertisement
இந்த நிலையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை யூடியூப் சேனல்களில் என்னை மிகவும் தரக்குறைவாக சிங்கமுத்து பேசியுள்ளார். இதனால், எனக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள நல்ல பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த சிங்கமுத்து எனக்கு நஷ்டஈடாக ரூ.5 கோடி தருமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த மனு, நீதிபதி டீக்காராமன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் 2 வாரங்களுக்குள் பதில் தருமாறு சிங்கமுத்துவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
Advertisement