தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடிகரின் புதிய கட்சி ‘பி’ டீம்தான் என்பது வெட்டவெளிச்சமானது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நீச்சலுக்கு வசூல் செய்யும் கட்டணம் கவர்மென்ட்டுக்கு போகுதான்னுதான் தெரியலையாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
Advertisement

‘‘வெயிலூர் மாவட்டம் காட்டுப்பாடியில போராடி விளையாட்டு மைதானத்தை கட்டுனாங்க.. அந்த மைதானத்துல, நீச்சல்குளத்தையும் சேர்த்து கட்டி, பயன்பாட்டுல இருக்குது... நல்ல விஷயம்தான். இந்த நீச்சல் குளத்துல கோடை காலத்தையொட்டி சிறுவர்கள், பெரியவர்கள்னு நீச்சல் பயிற்சிக்கு போறாங்க.. தனியார் நீச்சல் குளங்களை போல, இந்த கவர்மென்ட் நீச்சல் குளத்துலயும், தனி நபர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு குறிப்பிட்ட தொகை வசூல் செய்றாங்க.. தனியாரைவிட இங்க கட்டணம் குறைவுதான். அதேசமயம் இந்த கட்டணம் வசூல் செய்றதுக்கு ஆன்லைன் மூலம் கட்டணம் பெறப்படுதாம்.. ஆன்லைனில் கட்டணம் வசூல் செய்வதை, மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கான வங்கி கணக்கில் பணம் பெற வேண்டும். ஆட்கள் அதிகமாக வந்தால், தங்களுடைய செல்போனில் பணத்தை பெற்றுக்கொண்டு, அந்த நபர்களுக்கு குளிக்க அனுமதி வழங்கி விட்டு, பணத்தை அபேஸ் செய்றதா புகார்கள் எழுந்திருக்குது.. இந்த பணம் கவர்மென்ட்டுக்கு போகுதா இல்லையான்னு தெரியலனு சொல்றாங்க.. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிங்க உண்மை என்னன்னு விசாரிச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்னு கோரிக்கை ஒலி ஒலிக்க தொடங்கியிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நடிகரின் புதிய கட்சி மலராத தேசிய கட்சியின் ‘பி’ டீம் என்பதற்கு அக்கட்சியின் மாநில தலைவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மாதிரி பேசினாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மலராத தேசிய கட்சியின் மாநில தலைவரான அல்வா ஊரின் எம்எல்ஏ தலைமையில் 3 மாவட்டங்களின் நிர்வாகிகள் கூட்டம் அல்வா ஊரில் நடந்திருக்கு.. இதில் தேசிய கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கிட்டாங்களாம்.. ஏற்கனவே இலை கட்சியின் தலைவரை டெல்லிக்கு அழைத்து பணிய வைத்துதான் தேசிய கட்சி கூட்டணி ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கு.. தேசிய கட்சிக்கு தமிழ்நாட்டில் வலு இல்லாத நிலையில் மற்ற கட்சிகளை எல்லாம் வா வா என கூவிக்கூவி அழைச்சிட்டு இருக்காங்க.. கடந்த மக்களவை தேர்தலில் தேசிய கட்சியை இலை கட்சி கழற்றி விட்ட நிலையில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்ததால், முட்டையுடன் தேசிய கட்சி திருப்திப்பட்டுக் கொண்டது.. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேசிய கட்சியின் கூட்டணி குறித்து மாநில தலைவரான அல்வா ஊரின் எம்எல்ஏ நிருபர்களிடம் பேசும்போது, புதிய கட்சி துவங்கியுள்ள நடிகரை நாங்கள் கூட்டணிக்கு அழைக்கவே இல்லையே என கூறினாராம்.. சிறுபான்மை வாக்குகளை பிரிப்பதற்காக மலராத தேசிய கட்சியின் பின்னணியில்தான் நடிகர் புதிய கட்சி தொடங்கியுள்ளார் என அரசியல் கட்சியினர் கூறி வரும் நிலையில், அதை ஆமோதிப்பது போல் அல்வா ஊரின் எம்எல்ஏவின் பதிலும் இருந்துருக்கு.. இதன் மூலம் மலராத தேசிய கட்சியின் ‘பி டீம்’ தான் நடிகர் கட்சி என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பா பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அமைச்சரவை புதிய சர்ச்சையால் அப்செட்டில் இருக்கும் புல்லட்சாமி டெல்லி பவர்புல் அழைப்பைக்கூட நிராகரித்து விட்டாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘யூனியன் பகுதியான புதுச்சேரியில் புதுப்புது மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தபடி இருக்காம்.. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆதரவு கட்சிகளே முறைகேடுகளை தோலுரித்துக் காட்டி வர்றாங்களாம்.. அதற்கேற்ப அதிகாரிகளும் அவ்வப்போது லஞ்ச லாவண்யத்தில் வசமாக சிக்குகிறார்களாம்.. தேர்தல் நெருங்குவதால் அரசியல் ஆட்டம் சூடுபிடிக்க, ஒவ்வொரு முறைகேடுக்கும் நியாயம் கேட்டு வீதியில் இறங்கி கொடிபிடிக்க தயாராகி வருகிறதாம் பிரதான எதிர்க்கட்சியான சூரியன். அதேபோல கையும் தனது பங்களிப்புக்கு ஆதாரங்களை வைத்துக் கொண்டு கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்புகிறார்களாம்.. ஆனால் எதற்கும் பதிலளிக்காமல் மவுன பயணத்தை தொடர்கிறாராம் புல்லட்சாமி.. தாமரையின் நெருக்கடியால் முதன்முதலாக தலித் இல்லாத அமைச்சரவை என்ற புதிய சர்ச்சையை சுமக்கும் நிலையில், மறுபுறம் எதிர்க்கட்சிகளும் சாட்டையை கையில் எடுத்துள்ளதால் கூட்டணி குழப்பத்தில் கடும் அப்செட்டில் உள்ளாராம் புல்லட்சாமி.. இதனாலேயே டெல்லியில் இருந்து வந்த பவர்புல் அழைப்பைகூட நிராகரித்து விட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பாலியல் புகார் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்வதில் என்ன பிரச்னையாம்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘சமீபத்தில் சென்னை மாநகரில் உள்ள ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்ற தனியார் வங்கியில் பணிபுரியும் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். ஆனால், பாலியல் அத்துமீறல் நடந்த இடம் கோயம்புத்தூர் என்பதால் புகாரை வாங்க மறுத்த போலீசார் கோயம்புத்தூருக்கு சென்று புகார் அளிக்கும்படி சொல்லியிருக்காங்க.. ஆனால் அங்கு தனக்கு யாரும் இல்லை. நான் எப்படி அங்கு சென்று புகார் அளிக்க முடியும் என கேட்ட அந்த பெண், உயர் அதிகாரியை அணுகினாராம்.. அப்புறம், துணை கமிஷனர் உத்தரவின் பேரில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருது.. மேலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இரண்டு எழுத்து கொண்ட பெண் தலைமை காவலர் ஒருவர் ஆய்வாளர் போல அதிகாரம் செலுத்தி வர்றாராம்.. ஏற்கனவே இவர் சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லியில் பணிபுரிந்த போது பிரச்னையில் சிக்கி சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தவராம்.. தற்போது இங்கேயும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துக்கிட்டு இருக்கிறது..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Advertisement

Related News