நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து..!
டெல்லி: நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தனது நடிப்பாற்றலால் பல தலைமுறைகளை கவர்ந்துள்ளார். ரஜினிகாந்தின் திரையுலக படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி தொடர்ச்சியான முத்திரை பதித்துள்ளன. நடிகர் ரஜினிகாந்த் நீண்டகாலம், ஆரோக்கியமான வாழ்க்கை வாழ பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement