திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி ரசிகர்கள், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்தனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகர் ரஜினிகாந்த் நேற்று திருமலைக்கு வந்தார். திருமலையில் உள்ள காயத்ரி ஓய்வறையில் தங்கிய அவர், இரவு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.
இதனை தொடர்ந்து இன்று காலை ஏழுமலையான் கோயிலில் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, பேரன்கள் யாத்ரா ராஜா, லிங்கா ராஜா, நடிகர் ரவிச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர். முன்னதாக கோயிலுக்குள் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், பேரன்கள் யாத்ரா, லிங்கா உள்பட 6 பேர், தங்கள் எடைக்கு நிகராக அரிசி, வெல்லம், நாணயங்களை காணிக்கையாக வழங்கினர். சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த ரஜினிகாந்தை, ரசிகர்கள், பக்தர்கள் செல்போனில் படம் எடுத்தனர். அப்போது அனைவருக்கும் கையசைத்துவிட்டு காரில் ஏறிச்சென்றார்.