கேரளா திரைப்பட விருது தேர்வுக் குழு தலைவராக நடிகர் பிரகாஷ் ராஜ் தேர்வு
சென்னை: நடிகரும், இயக்குனருமான பிரகாஷ் ராஜ், 2024ம் ஆண்டின் கேரள மாநில திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நடுவர் குழுவில் ரஞ்சன் பிரமோத், ஜிபு ஜேக்கப், பாக்யலட்சுமி, காயத்ரி அசோகன், நிதின் லூகாஸ் மற்றும் சந்தோஷ் எச்சிக்கானம் ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது தலைவராக பிரகாஷ் ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 128 திரைப்படங்கள் இந்த தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நேற்று முதல் இப்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் ரஞ்சன் பிரமோத், ஜிபு ஜேக்கப் ஆகிய இருவரும் முதன்மை நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ரஞ்சன் பிரமோத்தின் கீழ் எம்.சி.ராஜநாராயணன், சுபல் கே.ஆர் மற்றும் விஜயராஜமல்லிகா ஆகியோரும் ஜிபு ஜேக்கப்பின் கீழ் வி.சி.அபிலாஷ், ராஜேஷ் கே., மற்றும் டாக்டர் ஷம்ஷாத் ஹுசைன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.