பிரபல நடிகை மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி (70) இன்று காலமானார்!
Advertisement
சென்னை: நடிகை மனோரமாவின் மகனும் நடிகருமான பூபதி (70) இன்று காலமானார். தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகை மனோரமா. பெண் நடிகைகளில் 1000 படங்களுக்கு மேல் பல்வேறு பாத்திரங்களில் நடித்து சாதனை படைத்தவர். 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மனோரமா மறைந்தார். இவரது ஒரே மகன் பூபதி (70). அவரைத் திரையுலகில் அறிமுகப்படுத்தி பிரபலமாக்க மனோரமா எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.
நடிகர் விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்தில் அறிமுகமான பூபதி அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். சினிமாவில் பெரிதாக சோபிக்கவில்லை. இந்நிலையில் அவரை மதுப்பழக்கம் ஆட்கொண்டது. மனோரமாவின் மறைவுக்குப் பிறகு தி.நகர் நீலகண்ட மேத்தா தெருவில் பூபதி வசித்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பூபதி, வீட்டிலேயே இன்று காலை காலமானார்.
Advertisement