மலையாள நடிகர் ஷாநவாஸ் மரணம்
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் ஷாநவாஸ் (70) உடல்நலக் குறைவால் நேற்று நள்ளிரவு திருவனந்தபுரத்தில் காலமானார். கடைசியாக பிரித்விராஜுடன் இணைந்து ஜனகணமன என்ற படத்தில் நடித்தார். தமிழில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். திருவனந்தபுரத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை நியூ கல்லூரியில் எம்ஏ ஆங்கிலம் படித்தார். நேற்று இவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 11.50 மணியளவில் ஷாநவாஸ் மரணமடைந்தார்.