நடிகர் ராணாவுக்கு மீண்டும் சம்மன்
05:58 PM Jul 23, 2025 IST
மும்பை: ஆன்லைன் ரம்மி செயலி விளம்பரத்தில் நடித்த விவகாரத்தில் நடிகர் ராணாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி ஆஜராக நடிகர் ராணாவுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று விசாரணைக்கு ஆஜராகவிருந்த நிலையில் நடிகர் ராணா அவகாசம் கேட்டிருந்தார். விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோருக்கு ஏற்கனவே ED சம்மன் அனுப்பியது.