தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடிகரின் மனசுல இடம்பிடிக்க அளவுக்கு மீறி கூவும் இலைக்கட்சி தலைவர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தேர்தலுக்கு முன்பே டிரான்ஸ்பர் வாங்கிட்டேன் என பல்வேறு பிரச்னைகளில் சிக்கிய அதிகாரி மான்செஸ்டர் மாநகராட்சியில் கெத்துகாட்டுகிறாராமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘வருவாய்த்துறை ஆபீசர் ஒருவர் எங்கே டிரான்ஸ்பர் போட்டாலும் அதை எல்லாம் உடைச்சு, மான்செஸ்டர் மாவட்டத்திலேயே வலம் வர்றாராம்.. கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலம், தாட்கோ, ஆர்டிஓ அலுவலகம் என ரவுண்ட் வந்த இந்த ஆபீசர் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார்..

Advertisement

செம்மண் கடத்தல் விவகாரம், ஏழைகளுக்கு கொடுத்த பட்டாக்களை வேறு நபர்களுக்கு மாற்றி கொடுத்த விவகாரம் என தொடர்ந்து பல பிரச்னைகளில் சிக்கியதால் சமீபத்துல வெளி மாவட்டத்திற்கு டிரான்ஸ்பரில் தூக்கி அடிக்கப்பட்டார்.. ஆனா டிரான்ஸ்பர் ஆர்டரை தன்னுடைய செல்வாக்கு மூலமாக உடைத்தெறிந்த அதிகாரி மான்செஸ்டர் மாநகராட்சியில் அதிகாரம் மிக்க போஸ்டிங் வாங்கிட்டாராம்.. அடுத்த 5 மாசத்துல எலக்‌ஷன் வரும்.. அதுக்காக எப்படியும் டிரான்ஸ்பர் போடுவாங்க.. நான் இப்பவே டிரான்ஸ்பர் வாங்கிட்டேன். மறுபடியும் மாத்த மாட்டாங்க..

எப்படியும் நான் தேர்தல் அதிகாரியா இருப்பேன், அப்பறம் பாருங்க நம்ம பவர் எப்படியிருக்கும் என கெத்து காட்டிட்டு வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஆட்சி மன்ற குழுவை மிஞ்சி இலைக்கட்சி வேட்பாளாரை இப்போதே கட்சிக்கூட்டத்தில் அறிவிச்சு திடீர் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டாராமே மாஜி எம்எல்ஏ தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயில் மாவட்டத்தில் குப்பம் என்று முடியும் தொகுதியில, பாக்கம் என்று முடியுற பஞ்சாயத்துல இலை பார்ட்டிகளோட கூட்டம் கொஞ்ச நாளுக்கு முன்னாடி நடந்திருக்குது.. இந்த கூட்டம் டிஸ்ட்ரிக் செக்ரட்ரி தலைமையில் நடந்துச்சாம்..

இந்த கூட்டத்தில அமைப்பு செயலாளர் இரண்டு எழுத்து பெயர் கொண்டவரும், பொறுப்பாளர்களும் கலந்துகொண்டாங்களாம்.. இதில் பேசிய இைலக்கட்சி மாஜி எம்எல்ஏ லோகமானவர், வரும் சட்டமன்ற தேர்தலில் காட்டு பாடி தொகுதியின் வெற்றி வேட்பாளர் இரண்டு எழுத்து கொண்ட அமைப்பு செயலாளர்தான் என்று அறிவித்தாராம்.. அதோட அவரை பற்றி அடுக்கடுக்காக துதி பாடினாராம்.. இதைக்கேட்ட இலை கட்சி நிர்வாகிங்க அதிர்ச்சி ஆகிட்டாங்களாம்..

இலைக்கட்சியை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில ஆட்சி மன்ற குழு பரிசீலித்து அக்கட்சியின் பொது செயலாளர் வேட்பாளரை அறிவிப்பதே நடைமுறை. மாவட்ட செயலாளரை மேடையில் வைத்துக் கொண்டே, பொறுப்பாளர்கள் முன்னிலையில் மாஜி எம்எல்ஏ திடீரென மற்றொரு தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்து இருப்பதுதான் ஹாட் டாப்பிக்காக இருக்கு.. இந்த திடீர் அறிவிப்புக்கு கூட்டணி கட்சியான மலர் கட்சி நிர்வாகிங்களும் தங்களோட அதிருப்தியை வெளிப்படுத்தினாங்களாம்..

இலை கட்சி நிர்வாகிங்க தங்களோட இஷ்டத்துக்கு நடந்து கொண்டு வர்றாங்க.. பொது செயலாளரான சேலத்துக்காரரை ஒரு பொருட்டாவே கருத மாட்டேங்கிறாங்க.. இதற்கு கட்சி தலைமை கடிவாளம் போடணும்னு பேசிக்கிறாங்க இலைக்கட்சி தொண்டர்கள்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நடிகரின் மனசுல எப்படியாவது இடம்பிடிக்கணும்னு தான் இலைக்கட்சி தலைவர் அளவுக்கு மீறி கூவுறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவருக்கு கூட்டணியில் நாளுக்குநாள் நெருக்கடி அதிகமாகிகிட்டே போகுதாம்.. இவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் அவரை மண்ணை கவ்வ வைப்பதே எங்களது முதல் வேலை என குக்கர் தலைவர் சபதம் எடுத்திருக்காராம்.. எப்படியாவது ஒரு கூட்டணியை ஏற்படுத்தி, கோபிக்காரர் அல்லது ஒன்றிய நிதி மந்திரியை சிஎம் ஆக்கிவிடலாம் என்று மலராத கட்சி பெரும் ரகசிய திட்டத்தை வச்சிருக்காம்..

கூட்டணியும் சரியா தேறல என்ன செய்யப்போறேன்னு தெரியலையேன்னு நினைச்சிக் கிட்டிருந்த இலைக்கட்சி தலைவருக்கு கரூரில் 41 பேர் உயிரிழப்பு கைகொடுத்ததாக நினைக்கிறாராம்.. சினிமா விசில் சத்தத்தில் முதல்வர் கனவில் மிதந்துக்கிட்டிருந்த நடிகர் கரூர் சம்பவத்தால் மீளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்காராம்.. இந்த நேரம் தான் நடிகரின் மனதில் இடம்பிடித்துவிட நல்ல வாய்ப்பு, இதனை சரியாக பயன்படுத்தி நடிகரின் இதயத்தில் இடம்பிடித்து விட வேண்டும் என்பதில் அதிதீவிரமாக இருக்காராம்...

இதனால் கரூர் உயிரிழப்பு சம்பவத்தை கையில் எடுத்திருப்பதாக கட்சிக்காரங்களே சொல்றாங்க.. ஆனால் வெளியே பரவும் வதந்திகளை வைத்து அரசியலில் ஜொலிக்க போறாராம் இலைக்கட்சி தலைவர்... கரூரில் இறந்துபோன 41 பேருக்கும் ஏன் அவசரமா போஸ்மார்ட்டம் செஞ்சீங்க... கூட்டத்துக்குள்ளாற ஆம்புலன்ஸ் எப்படி வந்தது? ஏன் பாதுகாப்பு கொடுக்கல.. தனி நபர் ஆணையம் அமைச்சது ஏன்? என அடுக்கடுக்கா சொல்லிக்கிட்டே போறாராம்.. இதையெல்லாம் அவரது அடிப்பொடிகள் ஆஹா... ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுறாங்களாம்..

அவரது தீப்பிடிக்கும் பேச்சால் நாங்கள் ரொம்பவே ஹேப்பியா இருக்கோமுன்னு நெஞ்சை நிமித்துறாங்களாம்.. ஆனால் நடிகரால் தான் இத்தனை உயிர்களும் போனது என்பது நடிகர் மட்டுமல்லாது உலகத்துக்கே தெரியும். ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக இல்லாமல், பொய்யான வதந்திகளை வைத்து அரசியல் செய்யலாமா எனவும் பொதுமக்கள் கேள்விக் கேட்கிறாங்களாம்...

ஒரு கட்சியின் தலைவராக இருந்துகொண்டு அரசியல் லாபத்துக்காக இவ்வாறு பொய்களை சொல்லிக்கொண்டே இருப்பதை பார்த்து கரூரின் ஒட்டுமொத்த மக்களும் வேதனையில் இருக்காங்களாம்... இலைக்கட்சி தலைவரின் நடவடிக்கையை பார்த்து நடிகரின் ரசிகர்கள் நம்மை விட அளவுக்கு அதிகமாக கூவுவதாக சொல்லி தாளாத சோகத்திலும் சிரிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நிர்வாகிகள் மாற்று கட்சிக்கு தாவியதால் பொறுப்பாளர்களை நியமிக்க முடியாமல் தேனிக்காரர் திணறுகிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் தேனிக்காரர் அணியில் மாவட்ட பொறுப்பில் இருந்து வந்த முக்கிய நிர்வாகிகள் யாரும் இல்லையாம்.. இந்த அணியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அவரது ஆதரவாளர்களுடன் சில மாதங்களுக்கு முன் மாற்றுக்கட்சிக்கு தாவி விட்டாங்களாம்.. இதனால் தேனிக்காரர் கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.. சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அதற்குள் முக்கிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். தற்போது யாராவது கிடைத்தால் போதும் என தேனிக்காரர் அவரது நெருங்கிய ஆதரவாளர்களிடம் பேசிருக்காரு..

மாவட்ட பொறுப்பு வழங்குவதற்கான தகுதியான ஒருவர் கூட இதுவரை கிடைக்காததால் பெயர் அளவுக்காவது பொறுப்பாளர்கள் நியமித்து விட வேண்டும் என்பதில் தேனிக்காரர் தீவிரமாக இருக்கிறாராம்.. தற்போது பொறுப்பாளர்கள் கிடைக்காத பட்சத்தில் தொண்டர்களை திரட்டுவது என்பது கனவில்கூட நினைத்து பார்க்க முடியாது என தேனிக்காரரின் நெருங்கிய ஆதரவாளர்களுக்குள் அரசல்புரசலாக பேசிக்கிறாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Advertisement