தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரபல நடிகர் டெல்லி கணேஷ்(80) உடல்நலக் குறைவால் காலமானார்

சென்னை: பிரபல நடிகர் டெல்லி கணேஷ்(80) சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். உடல்நிலை சரியில்லாத நிலையில் இரவு 1 மணி அளவில் அவரின் உயிர் பிரிந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பு மட்டுமின்றி சிறந்த டப்பிங் கலைஞராகவும் திரைத்துறையில் பங்களித்துள்ளார்.
Advertisement

டெல்லி கணேஷ் கடந்த 1944ம் ஆண்டு நெல்லையில் பிறந்தார். டெல்லி கணேஷ் படங்களில் நடிப்பதற்கு முன் 1964 முதல் 1974 வரை இந்திய வான்படையில் பணியாற்றியுள்ளார். 1976 ஆம் ஆண்டு பட்டின பிரவேசம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தக்‌ஷின பாரத நாடக சபா எனப்படும் டெல்லி நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராகவும் இருந்தார்.

நகைச்சுவை கதாபாத்திரம், வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து சினிமாவில் தனி இடம் பிடித்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது இழப்பு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷ் மறைவுக்கு அவரது ரசிகர்களும் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

 

Advertisement