நடிகர் போஸ் வெங்கட்டுக்கு திமுகவில் பதவி: துரைமுருகன் அறிவிப்பு
சென்னை: நடிகர் போஸ் வெங்கட்டுக்கு திமுகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத் தலைவர் தமிழச்சி தங்கபாண்டியன் கல்வியாளர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட காரணத்தால், அவருக்குப் பதிலாக போஸ் வெங்கட் திமுக கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை துணைத் தலைவராக தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement