தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தப்பிய திலீப்.. பிரபல நடிகை பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் 6 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!!

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 6 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் ஒரு பிரபல மலையாள நடிகை திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் கடத்தி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனில்குமார், மலையாள முன்னணி நடிகர் திலீப் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

திலீப் மீது பலாத்காரத்திற்கு சதித்திட்டம் தீட்டியது, சாட்சியங்களை அழித்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பலாத்கார வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. நீதிபதி ஹனி எம். வர்கீஸ் வழக்கை விசாரித்தார். 7 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த இந்த விசாரணையில் கடந்த 8ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் முதல் 6 நபர்களான பல்சர் சுனில்குமார், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், சஜீஷ், சலீம் மற்றும் பிரதீப் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார்.

இவர்களுக்கான தண்டனை 12ம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். நடிகர் திலீப், சார்லி தாமஸ், சனில்குமார் மற்றும் சரத் ஆகியோர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 6 பேரின் ஜாமீனும் உடனடியாக ரத்து செய்யப்பட்டு திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. அதில் குற்றவாளிகள் 6 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Advertisement