14 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சியில் சாதனை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: 2,538 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய ஒரே அரசு திராவிட மாடல் அரசு. 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார வெற்றி உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரின் கூட்டு உழைப்பால் கிடைத்துள்ளது. இப்போது அடைந்திருக்கும் இலக்கோடு நான் திருப்தி அடைய மாட்டேன். எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான வெற்றிப்பயணத்துக்கு கிடைத்த மனசாட்சிதான் இது. என்னை நம்பி தமிழ்நாட்டின் ஆட்சியை என்னிடம் ஒப்படைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு பொருளாதார வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன். கடந்த 4 ஆண்டுகளில் 6.41 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுத்துள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.