சரித்திர விபத்தால் முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: கார்த்தி சிதம்பரம் விமர்சனம்
பழனிசாமி தேர்தலில் முதல்வர் பதவிக்கு நின்று வெற்றி பெற்று முதல்வர் ஆகவில்லை. சரித்திர விபத்தால் முதல்வரானவர். சரித்திர விபத்தால் முதலமைச்சர் ஆன பழனிசாமி 2 மக்களவை தேர்தல், ஒரு சட்டமன்ற தேர்தலில் தோற்றார் என கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். 3 இன்னிங்சிலும் அவுட் ஆன பழனிசாமி 2026ல் நடக்கும் 4வது இன்னிங்சிலும் அவுட் ஆவார் என தெரிவித்தார். சீமான் உணர்ச்சிவச அரசியல் செய்கிறார். ஆடு, மாடுகளை மதிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.
அதற்காக அவற்றை திட்டுவோரை தடுக்க சட்டமா கொண்டு வர முடியும். சுதந்திர நாட்டில் ஓபிஎஸ் சுற்றுபயணம் செய்ய தடையில்லை. நம் ஊரு பக்கம் வந்து செட்டிநாடு சமையல் சாப்பிட்டுவிட்டு செல்லட்டும். தேர்தல் ஆணையம் உள்ள பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. சிறுபான்மையினருக்கு வாக்கு உரிமை தரக்கூடாது என முயற்சி இருக்குமோ? என்று எனக்கு அச்சம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.