வெளிநாடுகளில் பின்பற்றப்படும் உயர்கல்வி கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைவு!!
டெல்லி: அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படும் உயர்கல்வி தொடர்பான கட்டுப்பாடு காரணமாக இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் வசிக்கும் மாணவர்கள் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று உயர்கல்வியை படித்து வருகின்றனர். இந்திய மற்றும் சீனா மாணவர்கள் அமெரிக்காவின் சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் பெரும்பங்கு வகிக்கும் நிலையில், அமெரிக்காவில் ட்ரம்ப் நிர்வாகம் அறிமுகம்படுத்திய புதிய விசா விதிகள் ஹெச்-1பி விசாக்களுக்கு ரூ.1 லட்சம் டாலர் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் இந்திய மாணவர்கள் அமெரிக்காவுக்கு விண்ணப்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைப்போன்று கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் ஆண்டுக்கு குறைந்தது சுமார் ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் வாழ்கை செலவு கணக்கில் கட்டவேண்டும் மற்றும் கனடாவின் புதிய பட்ஜெட் விதிகள் சர்வதேச மாணவர்களுக்கான படிப்பு அளவு அனுமதியை 50% சதவீதம் குறைத்தததால் தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கனடா நாட்டு தரவுகளின் படி 2025 முதல் காலாண்டில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட படிப்புக்கான அனுமதி 30,640 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 31% சதவீதம் குறைவு. 2024-ல் 12,000க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள் கனடாவுக்கு சென்றனர். ஆனால் 2025-ல் 35% சதவீதம் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஐஐடி மெட்ராஸ், அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள் பெரும்பாலானோர் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை தேர்வு செய்வார்கள். ஆனால் இங்கிலாந்திலும் வேலைவாய்ப்பு நெருக்கடிகளை உருவாகியுள்ளதால் இவர்களின் தேர்வு ஜெர்மனி, துபாய் ஆகிய நாடுகளை நோக்கி திரும்பியுள்ளது.