தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கர்ப்பத்தை கலைக்க மறுத்த கள்ளக்காதலி கொடூரக்கொலை: சடலத்தை சூட்கேசில் அடைத்து வீசிய காதலன் கைது

திருமலை: கர்ப்பத்தை கலைக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த காதலன், கள்ளக்காதலியின் கழுத்தை நெரித்து கொன்று சடலத்தை சூட்கேசில் அடைத்து வீசினார். அவரை போலீசார் கைது செய்தனர்.தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நிஜாம்பேட்டையில் பச்சுபள்ளி-மியாபூர் சாலையோரம் ஆள் நடமாட்டம் குறைவான பகுதியில் உள்ள முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியது. அவ்வழியாக ஆடு மேய்த்தவர்கள் பார்த்தபோது புதரில் புதிய சூட்கேஸ் இருந்தது தெரிய வந்தது.
Advertisement

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து சூட்கேசை திறந்து பார்த்தபோது, அழுகிய நிலையில் இளம்பெண் சடலம் இருப்பது தெரிந்தது. சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், கொலையானவர் நேபாள நாட்டை சேர்ந்த தாரா பெஹாரா(33) என்பதும், அவரை அவரது கள்ளக்காதலனான ஐதராபாத் இந்திரம்மா காலனியை சேர்ந்த விஜய்தோபா(30) என்பவர் கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து நேற்று விஜய்தோபாவை பிடித்து விசாரித்தனர். இதில் தாராபெஹராவை கொன்றதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது: நேபாள நாட்டில் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜய்தோபா(30), தாராபெஹாரா(33). தாராபெஹாராவிற்கு திருமணமாகி கணவர், 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளர். ஆனால் தங்களது குடும்பத்திற்கு தெரிய வந்தால் கள்ளக்காதலுக்கு இடையூறு ஏற்படும் என கருதிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஏப்ரல் மாதம் 4ம்தேதி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு வந்தனர்.

இங்கு ஜூபிலி ஹில்ஸ் பகுதி அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு ‘பாஸ்ட் புட்’ கடையில், விஜய்தோபா வேலை செய்து வந்தார். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு பவுராம்பேட்டையில் உள்ள இந்திரம்மா காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் ஒன்றாக ‘பாஸ்ட்புட்’ கடையை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தாராபெஹாரா கர்ப்பம் ஆனார். இதையறிந்த விஜய்தோபா, தற்போது குழந்தை பிறந்தால் இடையூறாக இருக்கும். எனவே கருவை கலைத்து விடும்படி தாராபெஹராவிடம் கூறியுள்ளார். ஆனால் தாராபெஹரா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். இந்நிலையில் கடந்த மாதம் 23ம்தேதி அதிகாலை இருவருக்கும் இடையே மீண்டும் இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த விஜய்தோபா, தாராபெஹாராவை துணியால் கழுத்தை நெரித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி இறந்தார்.

பின்னர் பெரிய சூட்கேசை வாங்கி அதில் உடலை அடைத்து, பச்சுபள்ளி-மியாபூர் சாலையில் உள்ள ரெட்டிஸ் ஆய்வகம் அருகே உள்ள முள்புதரில் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விஜய்தோபாவை போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News