இஸ்ரோ தலைவருக்கு அப்துல் கலாம் விருது
07:17 PM Aug 14, 2025 IST
சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்படும். காஞ்சிபுரம் துளசிமதி முருகேசனுக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.