சென்னை போன்ற மெட்ரோ பகுதிகளில் ஆவின் பால் விற்பனை 30% உயர்ந்துள்ளது: பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
சென்னை: சென்னை போன்ற மெட்ரோ பகுதிகளில் ஆவின் பால் விற்பனை 30% உயர்ந்துள்ளது என்று பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி அளித்துள்ளார். கடந்த ஆண்டு மொத்தம் ரூ.25 கோடிக்கு விற்பனையான நிலையில், இந்த ஆண்டு சுமார் ரூ. 33 கோடிக்கு விற்பனை ஆகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆவின் பாலகங்களில் சப்லை செயின்-ஐ அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆவின் பாலகங்களில் 200க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது"