நாடு முழுவதும் இறந்து போன 2 கோடி பேரின் ஆதார் எண் நீக்கம்
புதுடெல்லி: ஆதார் எண்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (உடாய்) கவனித்து வருகிறது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தகவல் அடிப்படையில் நாடு முழுவதும் இறந்து போன 2 கோடி பேரின் ஆதார் எண்கள் தற்போது நீக்கப்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கை ஆதார் பதிவுகளை துல்லியமாக வைத்திருப்பதையும் அடையாள தவறாகப் பயன்படுத்துவதை தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆதார் எண் ஒருபோதும் வேறொருவருக்கு வழங்கப்படுவதில்லை. எனவே இறப்புக்குப் பிறகு செயலிழக்கச் செய்வது மோசடி அல்லது நலத்திட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு குடும்ப உறுப்பினரின் மரணத்தைப் புகாரளித்தல் என்ற அம்சம் myAadhaar போர்ட்டலில் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.
Advertisement
Advertisement