ஆதார் விவரங்களை கேட்டு சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு தொந்தரவு!!
10:40 AM Sep 10, 2024 IST
Share
சென்னை: தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மும்பை அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி ஐகோர்ட் நீதிபதியிடம் பேசிய மர்மநபர் ஆதார் கார்டு விவரங்களை கேட்டு தொந்தரவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.