சொன்னால் சொன்னதை செய்கிறவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
ஈரோடு: சொன்னால் சொன்னதை செய்கிறவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பொல்லான் சிலை திறப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.பொல்லான் சிலையை திறந்து வைப்பதில் பெருமையும் வீரமும் அடைகிறேன். பூலித்தேவன், சின்னமலை, வீரமங்கை வேலுநாச்சியார், மாவீரன் பொல்லான் நமது மண்ணை மானத்தை காத்தவர்கள். சொன்னதை செய்வோம் என்பதற்கு பொல்லான் சிலை திறப்பே எடுத்துக்காட்டு. பொல்லானின் வீரத்தை காலத்துக்கும் எடுத்துச் சொல்ல இப்படி ஒரு நினைவுச்சின்னம் வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கை. தற்போது திராவிட மாடல் ஆட்சியில் கோரிக்கை நிறைவேறியுள்ளது. சொன்னால் சொன்னதை செய்கிறவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement