அடுத்த 2 நாட்களுக்கு சென்னையை ஒட்டியே காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருக்கும்: தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணிப்பு
சென்னை: அடுத்த 2 நாட்களுக்கு சென்னையை ஒட்டியே காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருக்கும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். சென்னையில் 2 நாட்களுக்கு மழை தொடரும். 2 நாட்களுக்கு சென்னை அருகிலேயே இருப்பதால் சென்னையில் மழை தொடர்ந்து பெய்யும்.
5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு. 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த டிட்வா புயல், 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்.
சென்னையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருக்கும்
அடுத்த 2 நாட்களுக்கு சென்னையை ஒட்டியே காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருக்கும்.