வெங்கடேஸ்வர சுவாமி கோயில் நெரிசலில் சிக்கி 9 பக்தர்கள் பலி: ஆந்திராவில் பரிதாபம்
திருமலை: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கூட்டநெரிசலில் சிக்கி 9 பக்தர்கள் பலியாகினர். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள காசிபுக்காவில் தனியார் நிர்வகித்து வரும் வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் உள்ளது. ஓராண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோயிலில் இன்று ஏகாதசி மற்றும் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த தடுப்பு கம்பி விழுந்ததில் ஒருவர் மீது ஒருவர் கீழே விழுந்தனர். இதில் மூச்சுத்திணறி 9 பக்தர்கள் இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயம்அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணைக் மேற்கொண்டு வருகின்றனர்.