டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு : 11 படுகாயம்
டெல்லி: டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் நுழைவு வாயில் கேட்-1 அருகே கார் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. டெல்லியில் உயர் பாதுகாப்பு அடுக்கில் உள்ள செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கார் வெடித்துச் சிதறியதை அடுத்து காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்தனர்.
கார் வெடித்துச் சிதறிய இடத்தில் கார் மற்றும் சில வாகனங்கள் தீப்பற்றி எரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கார் வெடித்து சிதறியது விபத்தா அல்லது குண்டு வெடிப்பு சம்பவமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாலை 6.50 மணியளவில் காரில் இருந்த குண்டு வெடித்துச் சிதறியதாக டெல்லி போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கார் வெடித்துச் சிதறியதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 8 வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. கார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையிடம் விளக்கம் கேட்டது உள்துறை அமைச்சகம். கார் குண்டு வெடிப்பை அடுத்து டெல்லி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திடீரென கார் வெடித்துச் சிதறியதால் பதறியடித்து மக்கள் ஒட்டம். டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் | தொடர்பாக என்.எஸ்.ஜி., என்ஐஏ விசாரணை