தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாடு முழுவதும் காலியாக கிடக்கும் 802 எம்பிபிஎஸ் இடங்கள்: மருத்துவ மாணவர் சேர்க்கை

சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வின் 3ம் சுற்று முடிவில் நாடு முழுவதும் 802 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வின் 3ம் சுற்று முடிவில் நாடு முழுவதும் 802 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன. தமிழகத்தில் மட்டும் 136 இடங்கள் நிரம்பாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 9 இடங்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைச் சோ்ந்தவை. அதேபோன்று மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் 22 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக இருப்பதும் தெரியவந்துள்ளது. அந்த இடங்கள் அனைத்தும் சிறப்பு கலந்தாய்வில் சோ்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 சதவீத இடங்களுக்கும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்களுக்கும் இணையவழியே மத்திய கலந்தாய்வுக் குழு மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 3 சுற்று கலந்தாய்வுகள் நிறைவடைந்துள்ளன. அதில், 389 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களும், 334 நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழக இடங்களும், 38 மத்திய கல்வி நிறுவன இடங்களும் நிரம்பாமல் உள்ளன. அதேபோன்று ஜெயின் சிறுபான்மையினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், பாதுகாப்புப் படையினரின் குழந்தைகள் மற்றும் கணவரை இழந்தவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களும் காலியாக உள்ளன.

முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்றவர்கள் அந்த இடத்தில் சேராமல் இருக்கவும், எந்த அபராதமும் இன்றி 2ம் சுற்றில் பங்கேற்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். அதேவேளையில், 3ம் சுற்றில் அவ்வாறு வாய்ப்பை நிராகரித்தால் அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு ரூ.10 ஆயிரமும், நிகர்நிலை பல்கலைக்ககழங்களுக்கு ரூ.2 லட்சமும் அபராதமாக செலுத்த வேண்டும். அதைத் தவிர கல்லூரி கட்டணத்தையும் செலுத்த வேண்டும். கலந்தாய்வின் இந்த விதிகளால் தான் இடங்கள் நிரம்புவதில் தாமதம் ஏற்படுவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களுக்கான இடங்களுக்கான கலந்தாய்வை மாநில மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு நடத்தி வருகிறது. இதுவரை தமிழகத்திலும் 3 சுற்று கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்த பிறகு மீதமுள்ள இடங்களுக்கு அடுத்த வாரத்தில் சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது.

Advertisement

Related News